ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷுக்கு ரூ.2 கோடி பரிசு: கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு ரூ.2 கோடி பரிசு தொகையை கேரள அரசு அறிவித்துள்ளது. நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது.

இந்தியா வெண்கலப்பதக்கம் வெல்ல இந்திய அணியின் ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முக்கிய காரணமாக இருந்தார். பாரிஸ் ஒலிம்பிக் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக ஏற்கனவே ஸ்ரீஜேஷ் அறிவித்து இருந்த நிலையில், அவர் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்கு 2 கோடி ரூபாய் வழங்கும் முடிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷுக்கு ரூ.2 கோடி பரிசு: கேரள அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: