கப்பலூர் சுங்கச்சாவடி: ஒரு வாரத்துக்கு பழைய நடைமுறையே தொடரும்

மதுரை: திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஒரு வாரத்துக்கு பழைய நடைமுறையே தொடரும். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததை அடுத்து ஒருவாரத்துக்கு பழைய நடைமுறையே தொடரும். திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. உள்ளூர் வாகனங்களுக்கு முழு கட்டண விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்க சுங்கச்சாவடி நிர்வாகம் முடிவு செய்தது. கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் முடிவுக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உள்ளூர் வாகனங்களுக்கு விலக்குதரக் கோரி நடந்த போராட்டம் எதிரொலியாக ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளூர் வாகன விலக்கு விவகாரத்தில் தேசிய | நெடுஞ்சாலை செயலருடன் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

The post கப்பலூர் சுங்கச்சாவடி: ஒரு வாரத்துக்கு பழைய நடைமுறையே தொடரும் appeared first on Dinakaran.

Related Stories: