- சேலம்
- யுவராஜ்
- சேலம் பெரம்மனூர் நாராயணபிள்ளை தெரு
- ஜீவிதா
- மகேந்திரன்
- கவிதா
- அங்கம்மாள் காலனி
- சேலம் புதிய பேருந்து நிலையம்
- தின மலர்
சேலம், ஜூலை 13: சேலம் பெரம்மனூர் நாராயணபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி ஜீவிதா(33). இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த மகேந்திரன், கவிதா ஆகியோரிடம் பிளாட் வாங்குவதற்காக ₹3.50 பணத்தை கடந்தாண்டு மே மாதத்தில் கொடுத்துள்ளார். ஆனால், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மகேந்திரன், கவிதா ஆகியோர் ஜீவிதாவிற்கு பிளாட் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். பலமுறை கேட்ட போதும் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து ஜீவிதா பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மகேந்திரனை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.
The post மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.