×

கஞ்சா வைத்திருந்த 7 பேர் கைது

சேலம், அக்.25: சேலம் மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீராணம் மற்றும் பேர்லாண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்தந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த 7 பேரை போலீசார் பிடித்து, அவர்களிடமிருந்து ₹37 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 735 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக வீராணம் பகுதியை சேர்ந்த மயிலப்பன், பூபதி கண்ணன், மாரியப்பன், சுக்கப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி, நேசமணி, சிவராமா, வலசையூரை சேர்ந்த ரமேஷ் ஆகிய 7 ேபரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா வைத்திருந்த 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : SALEM ,Dinakaran ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...