×

தலைவர்-கவுன்சிலர் இடையே வாக்குவாதம்

கெங்கவல்லி, அக்.26: தெடாவூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் வேல் தலைமையில் நேற்று நடைபெற்றது. செயல் அலுவலர் யவனராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 11 தீர்மானங்கள் வாசித்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 10வது வார்டு கவுன்சிலர் வெங்கடேசன்(பாமக) பேசும்போது, பேரூராட்சி நிர்வாகத்தில் பணிகள் மேற்கொள்வதற்கு முறையாக டெண்டர் விடப்படாமல் தன்னிசையாக முடிவு எடுப்பதாக தெரிவித்ததால் தலைவருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், கூட்டம் நடைபெற்ற கூடத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. ஒருவருக்கொருவர் கடுமையாக திட்டிக் கொண்டனர். வெளியிலிருந்து பொதுமக்கள் பார்க்கும் அளவுக்கு சண்டையிட்டுக் கொண்டனர். இதையடுத்து, இருவரையும் ஆதரவாளர்கள் சமரசப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

The post தலைவர்-கவுன்சிலர் இடையே வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Thedavur Metropolitan Government Meeting ,Yavanarani ,10th Ward Councillor ,Venkatesan ,Bamaka ,President ,Dinakaran ,
× RELATED தீக்குளிக்க முயன்ற வாலிபர் கைது