×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

சேலம், அக்.26: சேலம் கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் சுபாஷிற்கு நேற்றுமுன்தினம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் போலீசாருடன் சம்பவ இடம் சென்றார். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 பேரை சுற்றிவளைத்தனர். அதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் விநாயகம்பட்டி டெலிபோன் காலனியை சேர்ந்த அன்பழகன், பீகாரை சேர்ந்த 17வயது சிறுவன், தப்பியது கோவிந்தன் என தெரியவந்தது. இதையடுத்து அன்பழகன் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய கோவிந்தனை தேடி வருகின்றனர்.

The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Kannangurichi ,Inspector ,Subhash ,Kondapanayakanpatti ,Dinakaran ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...