×

ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹2 லட்சம் நிதி

மேட்டூர், அக்.24: மேட்டூர் அருகே நங்கவள்ளியில் உள்ள கெத்திக்குட்டை ஏரியில் கடந்த 20ம் தேதி துணி துவைப்பதற்காக சென்ற சிவலிங்கம் மகள் சிவநந்தினி(18), மகன் சிவஸ்ரீ(10) மற்றும் முனுசாமி மகள் ஜீவதர்ஷினி ஆகியோர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு தலா ₹2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ₹2 லட்சத்திற்கான காசோலையை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் செல்வகணபதி எம்.பி., ஆகியோர் நேரில் வழங்கினர். சிவலிங்கம் குடும்பத்திற்கு ₹4 லட்சத்திற்கான காசோலையும், முனுசாமி குடும்பத்திற்கு ₹2 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தா தேவி, சார் ஆட்சியர் பொன்மணி, ஒன்றிய திமுக செயலாளர் அர்த்தனாரி ஈஸ்வரன், பேரூர் திமுக செயலாளர்கள் முருகன், வெங்கடாஜலம், பொண்ணுவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹2 லட்சம் நிதி appeared first on Dinakaran.

Tags : Mettur ,Sivalingam ,Shivanandini ,Sivasree ,Munusamy ,Jivadarshini ,Kethikuttai lake ,Nangavalli ,
× RELATED மேட்டூர் காவிரியில் மிதந்து சென்ற சடலம்