- சேலம்
- சசிகலா
- Kannangurichi
- காவல் நிலையம்
- சென்னை
- கிச்சிபாளையம்
- Konkanapuram
- இன்ஸ்பெக்டர்
- சின்னத்தங்கம் இரும்பாலை
- Kichipalayam
- சம்பங்கி
- அம்மாபேட்டை
- தின மலர்
சேலம், அக்.25: சேலம் மாநகரில் கன்னங்குறிச்சி காவல்நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் சசிகலா. இவர் திடீரென சென்னைக்கு மாற்றப்பட்டார். கிச்சிபாளையம் இன்ஸ்பெக்டராக இருந்த பேபி, கொங்கணாபுரத்திற்கு மாற்றப்பட்டார். அதேபோல், கிச்சிபாளையம் குற்றப்பிரிவில் இருந்த இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் இரும்பாலைக்கும், அம்மாபேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சம்பங்கி கோவைக்கும், செவ்வாய்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, கோவைக்கும் மாறுதலில் சென்றுவிட்டனர். இந்த ஐந்து இடங்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் சில மாதங்களாகவே காலியாக உள்ளது. காலியாக உள்ள அந்த 5 இடங்களுக்கும், வெளியூர்களில் இருந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் கட்டுப்பாட்டு அறையில் உள்ளனர். இவர்களை காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
The post 5 இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி appeared first on Dinakaran.