போதைப்பொருள் வழக்கு: ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கியது டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்


டெல்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர்சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர். தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர்சாதிக் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில் ஜாமீன் கோரி டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாஃபர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நிபந்தனைகளுடன் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒவ்வொரு மாதமும் திங்கட்கிழமை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தது. செயல்பாட்டில் இருக்கும் செல்போன் எண் மற்றும் பாஸ்போர்டை விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும். ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதாகி உள்ளதால் ஜாஃபர் சாதிக் சிறையில்தான் இருப்பார்.

The post போதைப்பொருள் வழக்கு: ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கியது டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: