எல்ஐசி பிரிமியத்துக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்

ஓசூர், ஜூலை 12: எல்ஐசி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஓசூர் கிளை தலைவர் ஜெயபாரதி, செயலாளர் மதுசூதன் ரெட்டி, கிருஷ்ணகிரி கிளை தலைவர் பழனிச்சாமி கவுண்டர், செயலாளர் அருண் ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்ட எம்பி கோபிநாத்தை நேரில் சந்தித்து வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எல்ஐசி பாலிசி பிரிமியங்கள் மீது, கடந்த 2014ம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பிரிமியத்துக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். எல்ஐசி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகவே செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எல்ஐசி பிரிமியத்துக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: