மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; ரூ20.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்


திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், துணை தலைவர் சத்யாசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இந்த முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, கோரிக்கை எந்த துறை தொடர்பானது என்று ஆன்லைனில் பதிவு செய்து, அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மின் இணைப்புக்கான உத்தரவு, சக்கர நாற்காலி உள்ளிட்ட 47 பயனாளிகளுக்கு ரூ20 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, செங்கல்பட்டு சார் கலெக்டர் நாராயணசர்மா, கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குன்றத்தூர்:
குன்றத்தூர் அடுத்த கோவூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தர்மபுரியில் நேற்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த கோவூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

முகாமில், நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், ஒன்றிய துணை சேர்மன் உமா மகேஸ்வரி வந்தே மாதரம், கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; ரூ20.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: