டி20.யில் இந்தியா முதலிடம்

புதுடெல்லி: டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் தனது முதல் டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று நடந்த 3 வது டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 போட்டிகளில் 150 வெற்றிகள் பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி தன் வசமாக்கியது. தொடர்ந்து 142 வெற்றிகள் பெற்று பாகிஸ்தான் அணி 2வது இடத்தையும், 111 வெற்றிகள் பெற்று நியூசிலாந்து அணி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்திய அணி இதுவரை 230 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அதில் 150 வெற்றிகள், 69 தோல்விகள், 5 போட்டிகள் சமன் மற்றும் 6 போட்டிகளுக்கு முடிவு அறிவிக்கப்படவில்லை. கடந்த 2006ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணி அதில் வெற்றி பெற்றதுடன் 2007ம் ஆண்டு நடந்த முதல் டி20 உலக கோப்பையில் டோனி தலைமையிலான அணி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

 

The post டி20.யில் இந்தியா முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: