சேலம், ஜூலை 11: சேலம் ராஜாப்பிள்ளைக்காடு கடம்பூர் முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(34). டிரைவரான இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், அருகில் உள்ள சுடுகாட்டில், தனியாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர், அவரது டூவீலர் மற்றும் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ராஜா புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, டூவீலரை பறித்துச் சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
The post வாலிபரிடம் டூவீலர் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.