×

காரைக்கால் கலெக்டர் அலுவலகத்துக்கு ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் வந்த பணியாளர்களுக்கு அனுமதி மறுப்பு


காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள், ஊழயர்கள் அனைவரும் இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கலெக்டர் மணிகண்டன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கலெக்டர் அலுவலகத்துக்கு ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பணியாளர்கள் சிலரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பணியாளர்கள் விரைந்து சென்று கடைகளில் ஹெல்மெட் வாங்கி அணிந்து கொண்டு வந்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வந்தது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.

The post காரைக்கால் கலெக்டர் அலுவலகத்துக்கு ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் வந்த பணியாளர்களுக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Duweiler ,Karaikal ,Collector ,Manikandan ,Karaikal Collector's Office ,
× RELATED கேரளாவில் இருந்து இறைச்சி கழிவு ஏற்றி வந்த லாரி: போலீசார் விசாரணை