அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு இனிமேல் ஒன்றுமில்லை: எடப்பாடி பேட்டி

ஓமலூர்: அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசுவதற்கு இனிமேல் ஒன்றுமில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டு விட்டார். இனி அவரை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. காவல்துறை உயர் அதிகாரி மாற்றப்பட்டதால் சட்டம், ஒழுங்கு சிறப்பாகி விடாது.

காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டால் தான் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். ரவுடிகளை அடக்க முடியும். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை, திட்டமிட்டு நடந்துள்ளது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் உள்ள சந்தேகத்தை போக்குவது அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில், கட்சியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைந்தனரே என்று கேட்டதற்கு, அவர்கள் யாரும் கட்சி அலுவலகத்தை உடைத்து ெநாறுக்கவில்லை, கட்சியினரை அடிக்கவில்லை, கட்சி வாகனங்களை நொறுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

The post அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு இனிமேல் ஒன்றுமில்லை: எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: