சம்பள பாக்கி பிரச்னை நடிகர் அரவிந்த்சாமி வழக்கு தள்ளிவைப்பு

சென்னை: நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வெளியானது. ஒப்பந்தப்படி தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி 30 லட்சம் ரூபாயை வழங்கவில்லை என கூறி பட தயாரிப்பாளர் முருகன்குமாருக்கு எதிராக அரவிந்த் சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மொத்தமாக 65 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் அரவிந்த்சாமிக்கு வழங்க உத்தரவிட்டது. உத்தரவின்படி தொகையை வழங்காததால் அரவிந்த் சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்று பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த பிரச்னையில் தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதால் அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post சம்பள பாக்கி பிரச்னை நடிகர் அரவிந்த்சாமி வழக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: