இன்றைய நாள் எனக்கானது: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி

ஜிம்பாப்வே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 74 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 160 ரன்களை விளாசியது. 30 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்திருந்த அபிஷேக் சர்மா, அடுத்த 16 பந்துகளில் 59 ரன்களை விளாசி சம்பவம் செய்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வான அபிஷேக் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 2வது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்த போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது என்றே நினைக்கிறேன். நேற்றைய ஆட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்தது சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை. இன்றைய நாள் எனக்கானது என்று உணர்ந்தேன்.

அதற்கேற்றபடி பேட்டிங்கில் செயல்பட்டேன். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஆட்டம் யார் பக்கம் இருக்கிறது என்பது முக்கியம். அதனை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். பயிற்சியாளர்கள், கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் ஆகிய மூன்று தரப்பினரும் என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. நிச்சயம் சிறப்பாக செயல்பட வேண்டும், ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய வேண்டும் என்று ருதுராஜ் அறிவுறுத்தினார். என்னை பொறுத்தவரை எனக்கு ஏற்ற இடத்தில் பந்து பிட்சானால், நிச்சயம் சிக்சருக்கு விளாச முயற்சிப்பேன். அது முதல் பந்தாக இருந்தாலும் சரி. இவ்வாறு அவர் கூறினார். இந்த இன்னிங்சின் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா சிக்சர் அடித்தது குறிப்பிடத்தக்கது.

 

The post இன்றைய நாள் எனக்கானது: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: