தேவிபட்டினம் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

 

ஆர்எஸ்.மங்கலம், ஜூலை 6: தேவிபட்டினம் அருகே வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே திருப்பாலைக்குடி மீனவ கிராம பகுதியில், ரேஷன் அரிசி கடத்தி வருவதாக தேவிபட்டினம் கடற்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு எஸ்ஐ அய்யனார் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். கிழக்கு கடற்கரை சாலையில் வந்த லோடு வேனை மறித்த போது நிற்காமல் சென்றுள்ளது. விரட்டி பிடித்த போலீசார் வேனில் சோதனையிட்டனர்.

இதில், 40 மூட்டைகளில் 2000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. வேனில் வந்த இருவரிடம் விசாரித்ததில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொன்னாபட்டியை சேர்ந்த பழனியப்பன் (67), திருமயம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த கண்ணன் (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், வேனுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

The post தேவிபட்டினம் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: