மின்வாரிய டி20 கிரிக்கெட் தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

 

கோவை, அக். 5: கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் அனைத்து மின் வாரியங்களுக்கு இடையிலான 46-வது அகில இந்திய மின்வாரிய டி20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, சட்டீஸ்கர், அசாம், ஒடிசா, டெல்லி, உத்தரபிரதேசம், கேபிசிஎல் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 20 ஓவர் போட்டி நாக் அவுட் முறையில் நடந்தது. இதில், நேற்று சட்டீஸ்கர், கர்நாடக அணிக்கு இடையே நடந்த அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சட்டீஸ்கர் அணி 20 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, இரண்டாவது பேட்டிங் செய்த கர்நாடக அணி 11.2 ஓவரில் 89 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு, அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய அணி, ஒடிசா அணிக்கு இடையில் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இரண்டாவது பேட்டிங் செய்த ஒடிசா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியை அடுத்து தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து, இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்க்கொள்கிறது.

The post மின்வாரிய டி20 கிரிக்கெட் தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: