வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ.. ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தரவுகள்: இதை பயன்படுத்துவது எப்படி? இதில் என்ன செய்யலாம்?

வாஷிங்டன்: உலகம் முழுவது தொழில்நுட்பம் அசூர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் தற்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு என்னும் மெட்டா ஏ.ஐ. எந்த வகையில் பயன்பட உள்ளது. மேலும், இதை பயன்படுத்துவது பாதுகாப்பானதா என பார்க்கலாம்.

நம் தேவைக்கு ஏற்ப தொழில்நுட்பத்தில் உள்ள வசதிகளும் மேம்படுத்தி கொண்டே வருகின்றன. நாம் அன்றாட பயன்படுத்தும் வாட்ஸ்அப் சேவை செயலியில் மெட்டா ஏ.ஐ. இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்-ன் வலது புறத்தில் ஊதா, நீலம் ஆகிய வண்ணங்களில் மெட்டா ஏ.ஐ. தென்படும். நாம் கேட்கும் கவிதை, மொழிபெயர்ப்பு, படம் மட்டுமின்றி தற்போதைய நாட்டு நடப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அது நமக்கு வழங்குகிறது. கேள்விக்கான பதில்களுடன் அதற்கான ரேபாரான்ஸ்சும் நமக்கு வழங்குகிறது.

ஆங்கிலம், ஹிந்தி, ஜெர்மன், ஃபிரெஞ்ச் உள்ளிட்ட 13 மொழிகளில் நமக்கு தரவுகளை வழங்கும் விதத்தில் மெட்டா ஏ.ஐ. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழி இதுவரை இணைக்கப்பட வில்லை. கூகுளுக்கு பதிலாக மெட்டா ஏ.ஐ. பயன்படுத்தப்படுவதால் நேரம் மிச்சமாவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு பக்கம் மெட்டா ஏ.ஐ. மூலம் நன்மை இருந்தாலும், இன்னொரு பக்கம் அதனால் சிக்கல்கள் எழும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நம்முடைய அனைத்து தகவல்களையும் சேகரிக்கும் மெட்டா ஏ.ஐ. பெயரை மட்டும் பயன்படுத்தாமல் வேறு ஒருவர் பெயரில் நம்முடைய தரவுகளை சேகரித்து வைப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மெட்டா ஏ.ஐ.யிடம் நாம் ஒரு கேள்வி கேட்டால் அடுத்த நொடியே அதற்கான பதில் வருகிறது. நாம் எந்த மாதிரியான கேள்விகளை கேட்கலாம் என்பதையும் தெரிந்து வைத்திருக்கும் வகையில் அத்தனை தரவுகளையும் நம்முடைய மொபைல் போனில் இருந்து சேகரித்து வைத்திருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மனிதர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்கள் இருக்கும் வரையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் மனிதர்களை அடிமைப்படுத்தும் வகையிலோ அல்லது நம்முடைய தனிநபர் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலோ ஒரு கண்டுபிடிப்பு இருக்கும் என்றால் நிச்சயம் ஆபத்தானதே.

The post வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ.. ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தரவுகள்: இதை பயன்படுத்துவது எப்படி? இதில் என்ன செய்யலாம்? appeared first on Dinakaran.

Related Stories: