தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் மாறுபாடு காரணமாகவும், தமிழ்நாட்டின் சில இடங்களில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக நீலகிரி, நாமக்கல், கோவை, மாவட்டங்களில் மழை பதிவானது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு தகவல் மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் ஜூலை 5,6,7-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: