விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பிரசாரம்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சூறாவளி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். திமுக துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான க.பொன்முடி, கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆர்.லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் இடைத்தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் 7, 8ம் தேதிகளில் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் எந்தெந்த தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று திமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: