அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துகள் அகிலேஷ் யாதவ். உங்களின் சிறப்பான தலைமைத்துவமும், தொடர் தீவிர பரப்புரையும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியைப் பெரும் வெற்றி பெற வைத்தது.

நம் இந்தியா கூட்டணிக்கு உங்கள் பங்களிப்புகள் மிக முக்கியமானதாக அமைந்துள்ளன. வருங்காலத்தில் நீங்கள் இன்னும் பெரிய பொறுப்புகளை வகிப்பதைக் காண ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: