மானாமதுரை அருகே மாஸ் காட்டிய மாட்டுவண்டி பந்தயம்

மானாமதுரை : மானாமதுரை அருகே, அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 2 ஆண்டுக்கு ஒரு முறை புரவி எடுப்பு திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த 25ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக நடந்த போட்டியில் பெரிய மாடு பிரிவிற்கு 8 மைல் தூரம், சிறிய மாடு பிரிவிற்கு 6 மைல் தூரம் பந்தைய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது.பெரியமாடு பிரிவில் 15 மாட்டு வண்டிகள், சிறிய மாடு பிரிவில் 16 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. மானாமதுரை விளாக்குளம் சாலையில் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து ஒன்றையொன்று முந்தி சென்றன. இப்போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளருக்கும், சாரதிக்கும், ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

The post மானாமதுரை அருகே மாஸ் காட்டிய மாட்டுவண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: