பணிநியமனத்திற்கான வழிகாட்டும் நெறிமுறைகள்: ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள காலிப்ணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிடும் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பிடும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்விதிட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
கல்வி தகுதி, வயது: முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றபடும். பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதார்ர்களிடமிருந்து எழுத்துப் பூர்வமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
The post மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணி appeared first on Dinakaran.