பெண்ணை குத்திக் கொன்ற வழக்கில் சபாபதி என்பவருக்கு ஆயுள் தண்டனை!

மதுராந்தகம் அருகே பெண்ணை குத்திக் கொன்ற வழக்கில் சபாபதி (67) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கீழ்நீர்பள்ளத்தை சேர்ந்த தேசம்மாள் (40) என்பவர் 100 நாள் வேலை திட்டத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். 100 நாள் வேலைக்கு வராமல் சம்பளம் கேட்டு சபாபதி, அவரது உறவினர்கள் 3 பேருடன் சேர்ந்து தேசம்மாளை மிரட்டியுள்ளார். சம்பளம் தர மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த சபாபதி தேசம்மாளை கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பியுள்ளார். 2016-ல் தேசம்மாளின் சகோதரி மகன் கொடுத்த புகாரில் கைதான முதியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு. சபாபதிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.7,500 அபராதம் விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

The post பெண்ணை குத்திக் கொன்ற வழக்கில் சபாபதி என்பவருக்கு ஆயுள் தண்டனை! appeared first on Dinakaran.

Related Stories: