திருத்துறைப்பூண்டியில் அடுத்தடுத்து 7 வீடுகளில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அடுத்தடுத்து 7 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதிக்குட்பட்ட வாணகாரா தெருவில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம் , பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அருகில் இருந்த 7 குடிசை வீடுகளில் தீ பற்றியது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது. மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் இருந்ததால் தீயை அணைப்பதற்கு சிரமம் ஏற்பட்டது. உடனடியாக நகராட்சி சார்பில் குடிநீர் வழங்குவதற்காக உள்ள தண்ணீரில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தி விபத்துக்கு மின் கசிவு காரணமா , அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என திருத்துறைப்பூண்டி போலீசார் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post திருத்துறைப்பூண்டியில் அடுத்தடுத்து 7 வீடுகளில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: