சிவகங்கையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் தேங்காய்கள் தேக்கம்: கொள்முதல் விலை உயர்வால் வியாபாரிகள் வருகை குறைந்தது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். திருப்புவனம், திருப்பாச்சேதி, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்ச தென்னை மரங்கள் உள்ளன. இங்குள்ள தேங்காய்கள் ருசி அதிகமாகவும், எண்ணெய் சத்து மிகுந்துள்ளதால் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

ஆனால், நான்கு மாநிலங்களை கடந்து செல்ல வேண்டிய இருப்பதால் சுங்க கட்டணம் மட்டுமே ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஆகிறது. இதனுடன் லாரி வாடகை சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது என்றும் வெளிமாநில வியாபாரிகள் விலை குறைவான கர்நாடகா, கேரளா தேங்காய்களை வாங்குவதால் திருப்புவனத்தில் தேங்காய்கள் லட்சக்கணக்கில் தேங்கி கிடக்கின்றன என்றும் விவசாயிகள் கூறியுள்ளன. சுங்கச்சாவடி கட்டணத்தில் தேங்காய் லாரிகளுக்கு சலுகை வழங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளன.

The post சிவகங்கையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் தேங்காய்கள் தேக்கம்: கொள்முதல் விலை உயர்வால் வியாபாரிகள் வருகை குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: