அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவலன் கேட்டில் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இதில், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, நிர்வாகிகள் சோமசுந்தரம், வள்ளிநாயகம், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜ், சத்யா, கிருஷ்ணமூர்த்தி, அரிக்குமார், பாலாஜி, ஜெயராஜ், திலக்குமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, காஞ்சிபுரம் ரெட்டை மண்டபம் பகுதியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கௌதம் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சதீஷ் உள்ளிட்ட பலர் திடீரென சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் 20 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

The post அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: