செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ16 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம்


தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம், சிட்லபாக்கம் ஏரிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலக்காமல் இருக்க ₹16 கோடியில் 8 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர், சிட்லபாக்கம் ஏரி புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர். மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ16 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் appeared first on Dinakaran.

Related Stories: