ஜன.6 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது 45வது சென்னை புத்தகக்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி சார்பில் 45வது சென்னை புத்தகக்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், ஜனவரி 6ம் தேதி முதல் 23ம்தேதி வரை நடக்கிறது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் வயிரவன் மற்றும் செயலாளர் முருகன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  சென்னையில் 45வது புத்தகக்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 6ம் தேதி தொடங்குகி, 23ம் தேதி வரை நடக்கிறது.விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும். ஜனவரி 6ம்தேதி மாலை 6 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகக் காட்சியை தொடங்கி வைக்கிறார். 2022ம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும் முதல்வர் வழங்குவார். இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதில், 800 அரங்குகள் அமைக்கப்படும். மேலும், புதிய புத்தகங்கள் வெளியீடும் நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் இலவசம். பொதுமக்களுக்கு நுழைவு ₹10 கட்டணம் வசூலிக்கப்படும். வாசகர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக தனியாக சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழு புத்தகக்காட்சியில் உணவகம் அமைக்க முன்வரலாம். மேலும் மேடையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தமிழ் எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் பேர் புத்தகக்காட்சியை பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post ஜன.6 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது 45வது சென்னை புத்தகக்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: