காமாட்சி அம்மன் கோயிலில் ரூ.62.97 லட்சம்; 193 கிராம் தங்கம் உண்டியல் வசூல்

காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோயிலில் ரூ.62.97 லட்சம்; 193 கிராம் தங்கம் ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் நேற்று எண்ணப்பட்டது.

இதற்காக கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் கார்யம் சுந்தரேசன், செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ.62 லட்சத்து 97 ஆயிரத்து 246 ரொக்கமும், 193 கிராம் தங்கமும், 559 கிராம் வெள்ளியும் கோயிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

The post காமாட்சி அம்மன் கோயிலில் ரூ.62.97 லட்சம்; 193 கிராம் தங்கம் உண்டியல் வசூல் appeared first on Dinakaran.

Related Stories: