தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி..!!

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் முன்னாள் உதவியாளர் செந்தில் வாரணாசியில் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

5 பேரும் 90 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் அண்மையில் ஜாமினில் வெளியே வந்தனர். 3 மாதங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் வாரணாசியில் மாறுவேடத்தில் இருந்த செந்தில் கைது செய்யப்பட்டார். மொட்டை அடித்து, தாடி வைத்து மாறு வேடத்தில் பதுங்கி இருந்த செந்திலை மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்து மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். ஏற்கனவே ஒரு முறை அவர் முன்ஜாமீன் கேட்டிருந்த நிலையில் அந்த ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டுமாக அவர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி விஜயகுமாரி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை மயிலாடுதுறை மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் வாதிட்டார். இது குறித்து அவர் பேசுகையில், இன்னும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட உள்ளதாகவும். செந்திலிடம் காவல் துறையினர் விசாரிக்க இருப்பதாலும் இப்போது ஜாமின் வழங்கினால் சாட்சிகளும், இவர்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்று வாதிட்டதால் செந்திலின் ஜாமின் மனுவை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Related Stories: