12ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு

சென்னை: 12ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தோரின் முடிவுகள் பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இனையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்கள் மட்டும் மேற்கண்ட தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post 12ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: