தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்


சென்னை: தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது மினிபேருந்துகளை மீண்டும் இயக்க அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வரைவு திட்ட அறிக்கையின் படி தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களை இயக்குவதற்காக அரசு அனுமதி வழங்கியது.

சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும். மேலும் எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என RTO-க்கள் முடிவு செய்யலாம். 18 km சேவை இல்லாத வழித்தடத்திலும் 8 கி.மீ. சேவை உள்ள வழித்தடத்திலும் அனுமதி வழங்கப்படும்.

அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மினி பஸ்களிலும் GPS வசதி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: