திருத்தணி அருகே டாஸ்மாக் கடை பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனை

திருத்தணி : திருத்தணியில், டாஸ்மாக் மதுக்கடைகள் பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனை பெயரில், போக்குவரத்து போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்துவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அரக்கோணம் சாலையில் வள்ளியம்மாபுரம் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தினமும் மாலை நேரங்களில் குடிமகன்கள் மதுக்கடைக்கு படையெடுத்து அவர்களுக்கு தேவையான சரக்கு வாங்கி செல்கின்றனர்.

சிலர் அதே பகுதியில் குடித்து விட்டு செல்வது உண்டு. இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு அரை கிலோ தூரத்தில் அரக்கோணம் சாலையில் நேற்று இரவு 7 மணி அளவில் இருண்ட பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானதி மற்றும் போலீசார் நின்று கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு அவ்வழியக சென்று வரும் வாகன ஓட்டிகளை இருட்டில் நிறுத்துவதால், திணறுகின்றனர். இருட்டில் பைக்கை நிறுத்தி சோதனையிடுவதால் குடும்பத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அருகில் இருண்ட பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை பெயரில் தொல்லை கொடுப்பதாகவும், குடித்து விட்டு வாகனம் ஒட்டுவதாக வழக்கு பதிவு செய்து வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். டாஸ்மாக் மதுக்கடை பகுதியில் வாகன சோதனை தொடர்பாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானதி கூறுகையில், தினமும் டிடி வழக்கு போட வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதால், வேறு வழியின்றி டாஸ்மாக் கடை பகுதியில் சோதனை மேற்கொண்டு டிடி வழக்கு பதிவு செய்வதாக கூறினார்.

The post திருத்தணி அருகே டாஸ்மாக் கடை பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனை appeared first on Dinakaran.

Related Stories: