குஜராத்தில் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை முஸ்லிம் பெண்ணுக்கு ஒதுக்க எதிர்ப்பு: குடியிருப்புவாசிகள் போராட்டம்

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவின் ஹர்னி பகுதியில் முதல்வரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. குறைந்த வருவாய் பிரிவினர் வசிக்கும் வகையில் மொத்தம்,460 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் பெண் ஒருவருக்கு அரசு வீடு ஒதுக்கியுள்ளது. இதை எதிர்த்து குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியிருப்புவாசி கூறுகையில்,‘‘ஹர்னி பகுதி இந்துக்கள் வசிக்கும் பகுதி ஆகும். இது பதற்றமான பகுதி என்பதால் ஒரு மதத்தை சேர்ந்தவரின் சொத்தை இன்னொரு மதத்தினர் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கலெக்டரின் அனுமதி இல்லாமல் ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினரின் சொத்தை வாங்க முடியாது’’ என்றார். வதோதரா மாநகராட்சி ஆணையர் திலீப் ராணா,‘‘இது சம்மந்தமாக புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின் தகுந்த முடிவு எடுக்கப்படும்’’ என்றார். கடந்த 2018ம் ஆண்டு முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கப்பட்டது. குடியிருப்புவாசிகளின் போராட்டம் காரணமாக அந்த பெண்ணுக்கு இன்னும் வீடு கிடைக்கவில்லை. அவர் தனது மகனுடன் வேறு ஒரு இடத்தில் தற்போது வசிக்கிறார்.ஜிதேந்திர பர்மார் கூறுகையில்,‘‘ ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்யாவிட்டால் டெல்லியிலும் இனி போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

The post குஜராத்தில் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை முஸ்லிம் பெண்ணுக்கு ஒதுக்க எதிர்ப்பு: குடியிருப்புவாசிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: