குண்டு வெடித்து 2 வீரர்கள் காயம்

நாராயண்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் குதுல் கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இந்தோ-திபெத் எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு நக்சல்களால் புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஐஇடி வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 2 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் வீரர்கள் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

The post குண்டு வெடித்து 2 வீரர்கள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: