அருணாச்சலில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

இடாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் 46 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. மாநில முதல்வராக பெமா காண்டு நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 11 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து 2 நாள் சட்டமன்ற சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் நினாங் எரிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பெண் எம்எல்ஏக்களும் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.

The post அருணாச்சலில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: