இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்; புளியந்தோப்பில் 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்: சிறுவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். சர்மா நகர் பகுதியில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். 17 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு படிப்பு சரியாக வராததால் வீட்டில் இருந்து வருகிறாள். இந்த சிறுமி, அதிக நேரம் செல்போனை பயன்படுத்தி வந்தார். இதுபற்றி சிறுமியின் தாய் கேட்டதால் வாக்குவாதம்தான் ஏற்படுமாம்.

இந்நிலையில் கடந்த வாரம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிலர், சிறுமியின் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள், ‘உனது மகள் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு எங்கள் மகன்தான் காரணம் என அவள் அனைவரிடமும் கூறுகிறாள். உனது மகளை கண்டித்து வை’ என கூறி சண்டை போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், உடனடியாக சிறுமியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தார்.

அப்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில், 8 மாதமாக செல்போனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புளியந்தோப்பு வஉசி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுடன் பழகி வந்ததும் அந்த சிறுவன் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது அடிக்கடி வந்து சிறுமியுடன் ஜாலியாக இருந்ததும் தெரிந்தது. மேலும் சிறுவனின் வீட்டில் ஆட்கள் இல்லாதபோது அழைத்து சென்று அங்கும் ஜாலியாக இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்; புளியந்தோப்பில் 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்: சிறுவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: