இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் சத்தியன், விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை. கொலை, கூட்டு சதி, உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் முறையாக நிரூபிக்கவில்லை’ என்றார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.
அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, இன்று தீர்ப்பளித்தனர். அதன்படி, இந்த தீர்ப்பில், தண்டனையை உறுதி செய்ய அரசு தரப்பு தவறிவிட்டது. எனவே, இந்த வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் அபராதம் கட்டியிருந்தால் அதை திரும்ப தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
The post டாக்டர் சுப்பையா கொலை வழக்கு; தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் விடுதலை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.