மங்கோலியாவில் கடும் பனிப்புயல் தாக்கத்தால் 70 லட்சம் கால்நடைகள் பலி

உலன்பாட்டர்: ரஷ்யாவுக்கும், சீனா மற்றும் திபெத்துக்கு இடையில் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் மங்கோலியா அமைந்துள்ளது. இதனால் இங்கு ஆண்டுக்கு 10 மாதங்கள் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில் குளிர்ந்த வானிலையே நிலவும். தற்போது இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.

இதனால் மங்கோலியா நாடு முழுவதும் பனியால் உறைந்துள்ளது. விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் பனிப்புயலுக்கு சேதமடைந்தன. இதனால் உணவு பொருட்களை உற்பத்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் உணவு பொருள் தட்டுப்பாட்டால் 70 லட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post மங்கோலியாவில் கடும் பனிப்புயல் தாக்கத்தால் 70 லட்சம் கால்நடைகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: