பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

மதுரை: பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் பலியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஆடு, மாடுகளை பலியிடும் சமூகத்தினரின் வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் உயர்நீத்திமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை பலியிட்டு வருகின்றனர். மாநகராட்சி அனுமதிக்கப்படாத இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆடு, மாடுகள் வதை சட்டத்தின்படி மாநகராட்சி அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் ஆடு, மாடுகளை பலியிட வேண்டும்.

ஆனால் அவ்வாறல்லாமல் வீடுகளிலும், இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களிலும் ஆங்காங்கே ஆடு, மாடுகளை வெட்டி பலியிடுகின்றனர். இதற்கு தடை வித்திக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஆண்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்காமல் வழக்கை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பக்ரீத் பண்டிகை 700 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இது போன்ற வழிபாடு நம்பிக்கையுடைய பலியிடுகளில் எவ்வித தலையீடும் இருக்க கூடாது என்பது தெளிவாக உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என தெரிவித்தார்.

இந்நிலையில் ஆடு, மாடுகளை பலியிடும் சமூகத்தினரின் வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் மனுதாரர் விரும்பினால் அவர்களையும் எதிர் மனுதாரராக சேர்க்கலாம் அதுவரை நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

The post பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: