அர்ஷ்தீப், ஹர்திக் அபார பந்துவீச்சு: ரன் குவிக்க அமெரிக்கா திணறல்

நியூயார்க்: இந்திய அணியுடனான டி20 உலக கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ரன் குவிக்க முடியாமல் திணறிய அமெரிக்கா, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்தது. நஸ்ஸாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். காயத்தால் அவதிப்படும் மொனாங்க் படேலுக்கு பதிலாக, அமெரிக்க அணியின் கேப்டனாக ஆரோன் ஜேம்ஸ் பொறுப்பேற்றார்.

ஷயன் ஜகாங்கிர், ஸ்டீவன் டெய்லர் இணைந்து அமெரிக்க இன்னிங்சை தொடங்கினர். அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரிலேயே ஷயன் (0), கவுஸ் (2) விக்கெட்டை பறிகொடுக்க, அமெரிக்கா 3 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 11 ரன் எடுத்து ஹர்திக் வேகத்தில் சிராஜ் வசம் பிடிபட்டார். ஓரளவு தாக்குப்பிடித்த ஸ்டீவன் டெய்லர் 24, நிதிஷ் குமார் 27 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

கோரி ஆண்டர்சன் 15 ரன், ஹர்மீத் சிங் 10, ஜஸ்தீப் சிங் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, அமெரிக்கா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்தது. ஷேட்லி வான் ரன், ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 9 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் 4 ஓவரில் ஒரு மெய்டன் உள்பட 14 ரன்னுக்கு 2 விக்கெட், அக்சர் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

The post அர்ஷ்தீப், ஹர்திக் அபார பந்துவீச்சு: ரன் குவிக்க அமெரிக்கா திணறல் appeared first on Dinakaran.

Related Stories: