நீட் தொடர்பாக 63 வழக்குகள் கேள்வித்தாள் வெளியானதாக எந்த ஒரு வழக்கும் இல்லை: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

புதுடெல்லி: நீட் யுஜி தேர்வு முடிவுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. மேலும் வடமாநிலங்களில் கேள்வித்தாள் வெளியானதாகவும், நீட் மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம் நடந்துள்ளதாகவும், ஒரே மையத்தில் தேர்வு எழுதிய பலர் முழு மதிப்பெண் பெற்றதாகவும் புகார் எழுந்தன. இந்த புகார்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை இயக்குனர் சுபோத்குமார்சிங் நேற்று கூறுகையில்,’ நீட்-யு.ஜி. தேர்வு முடிவு தொடர்பாக 63 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் கேள்வித்தாள் வெளியானதாக எந்த ஒரு புகாரும் இல்லை.

இதன் மூலம் நீட் தேர்வின் புனிதத்தன்மையை மீண்டும்உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 40 தேர்வர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல் மற்றும் ஓஎம்ஆா் தாளை சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான புகார்கள் பற்றி விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரையின் பேரில், 12 பேர் 3ஆண்டுகளுக்கும், ஒன்பது பேர் இரண்டு ஆண்டுகளுக்கும், இரண்டு பேர் தலா ஒரு வருடத்துக்கும் தேர்வெழுதத் தடை செய்யப்பட்டனர். மீதமுள்ள விண்ணப்பதாரர்களின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

 

The post நீட் தொடர்பாக 63 வழக்குகள் கேள்வித்தாள் வெளியானதாக எந்த ஒரு வழக்கும் இல்லை: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: