துபாயில் எக்ஸ்போ 2020 வளாகத்தை பார்வையிட்டார் அமைச்சர் மன்சுக் மாண்டவியா; இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு.!

துபாய்; சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை மத்திய‌ அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா துபாய் எக்ஸ்போ 2020 வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள‌ இந்தியா பெவிலியனை பார்வையிட்டார். அமைச்சர் பேசுகையில், “இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன, ஏனெனில் இந்தியா வலுவான ஜனநாயக நாடு, எளிதாக வணிகம் செய்வதற்கு சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது , பிரதமர்  நரேந்திர மோடியின் தலைமையில் வளர்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளது. நடுத்தர வர்க்கம் விரிவடைகிறது, நுகர்வு சக்தி அதிகரித்து வருகிறது. மேக்-இன்-இந்தியாவை வலுப்படுத்த உலக முதலீட்டாளர்களை நாட்டுக்கு வந்து முதலீடு செய்யுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்து குறித்து  சுகாதார அமைச்சர் கூறுகையில், “தடுப்பூசி உற்பத்தித் துறையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. இரண்டு இந்திய நிறுவனங்கள் R&D மட்டுமின்றி தடுப்பூசிகளின் உற்பத்தியையும் நாட்டில் செய்துள்ளன. எங்கள் தடுப்பூசி உற்பத்தி திறன் மாதத்திற்கு 310 மில்லியன் டோஸ் ஆகும், மேலும் 86% மக்கள் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 55% பேர் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர். இதுவே இந்தியாவின் பலம். உலகெங்கிலும் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியாவில் ஆராய்ச்சி செய்யப்பட்ட’ தடுப்பூசிகளை நாங்கள் வழங்கி வருகிறோம், மேலும் கோவிட் நோயிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு அனைவருக்கும் உதவுகிறோம்” என்று அவர் மேலும் கூறினார். இந்தியா பெவிலியன் குறித்து டாக்டர் மாண்டவியா கூறுகையில் “இந்த பெவிலியன் இந்தியாவின் வளமான கலாச்சாரத்தையும் அதன் 75 ஆண்டுகால பயணத்தையும் காட்சிப்படுத்துகிறது மற்றும் அதன் தொழில்கள் மற்றும் வளர்ச்சி பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. புதிய மற்றும் தன்னம்பிக்கை இந்தியா என்ற கருப்பொருளுடன், பெவிலியன் உண்மையிலேயே  உலகம் ஒரே குடும்பம் கொள்கை மற்றும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது என்றார். ஹெச்.இ. சுல்தான் அஹ்மத் பின் சுலேயம், குழு தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, டிபி வேர்ல்ட் அவரை டாக்டர் மாண்டவியா சந்தித்தார் மேலும் EXPO2020 இல் UAE, US மற்றும் சவுதி அரேபியாவின் பெவிலியன்களை பார்வையிட்டார்….

The post துபாயில் எக்ஸ்போ 2020 வளாகத்தை பார்வையிட்டார் அமைச்சர் மன்சுக் மாண்டவியா; இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு.! appeared first on Dinakaran.

Related Stories: