ரேபரேலியை ராகுல் தக்கவைத்து கொண்டால் வயநாட்டில் பிரியங்கா போட்டி?.. கேரள காங்கிரஸ் விருப்பம்


புதுடெல்லி: ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்கவைத்து கொண்டால் வயநாட்டில் பிரியங்கா காந்தியை களமிறக்க கேரள காங்கிரஸ் தலைமை முயற்சிகளை செய்து வருகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்தரபிரதேசத்தில் ரேபரேலியில் ராகுல்காந்தி போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றார். ஏற்கனவே வயநாடு தொகுதியாக இருக்கும் ராகுல்காந்தி, தற்போது இரு தொகுதிகளிலும் வென்றுள்ளதால் ஏதாவது ஒரு ெதாகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த வகையில் ரேபரேலி தொகுதியை தக்கவைக்க முடிவு செய்துள்ள ராகுல் காந்தி, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவது உறுதியாகியுள்ளது. அதனால் வயநாடு தொகுதியில் ராகுலுக்குப் பதிலாக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று கேரள காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கிறது. தற்போதைக்கு பிரியங்கா காந்தியின் விருப்பம் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இதுகுறித்து கட்சியின் தலைமை தீவிரமாக ஆலோசிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என்றால், கே.பி.நவுஷாதலி உள்ளிட்ேடாரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எவ்வாறாகிலும் வரும் ஒரு வாரத்திற்குள் வயநாடு அல்லது ரேபரேலி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு முன்பாக இரு தொகுதி வாக்காளர்களையும் ராகுல்காந்தி சந்தித்து நன்றி கூற வேண்டும் என்பதால், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

The post ரேபரேலியை ராகுல் தக்கவைத்து கொண்டால் வயநாட்டில் பிரியங்கா போட்டி?.. கேரள காங்கிரஸ் விருப்பம் appeared first on Dinakaran.

Related Stories: