கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

நாகப்பட்டினம், ஜூன்9: திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் சரக பால்வளத்துறை முதல் நிலை ஆய்வாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஆவின் விரிவாக்க அலுவலர் செல்வராஜ் பேசினார். வவ்வாலடியில் ஆவின் பால் புதிய கிளை தொடங்குவது, ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிக் கடன் பெற உதவி செய்வது, ஆவின் பால் கொள்முதல் செய்வதற்கு புதிய கட்டிடம் கட்டுவது, பால் தரம் அளவிடும் கருவி வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சரவணன், செயலாளர் ரேணுகா,ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் உற்பத்தியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: