எதையும் எதிர்பார்த்து டெல்லி செல்லவில்லை: தமிழிசை பேட்டி

சென்னை: தமிழ்நாடு பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: தேர்தலில் போட்டியிட்ட ஒரு சாதாரண வேட்பாளராகத்தான் டெல்லி செல்கிறேன். எனது அரசியல் வாழ்க்கையில் நான் எதையும் எதிர்பார்த்தது கிடையாது. கட்சி கொடுக்கும் அங்கீகாரத்தை மட்டுமே பெரிதாக பார்க்கிறேன். கூட்டணி குறித்து நான் ஏற்கனவே கூறிவிட்டேன். ஜெயக்குமார் என்ன கூறினாலும் சரி, வேறு யார் கூறினாலும் சரி எனக்கு கவலை இல்லை. 2026க்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. இப்போது நாங்கள் கூட்டணி வைக்கிறோம் என்று கூறினாலும், அவர்கள் இல்லை என்று கூறுவது போல் நிலைமை இல்லை. 2026 சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அந்தந்த மாநிலத்திற்கு தகுந்தாற்போல் ஒரு வியூகம் அமைப்போம். 2026ல் வலிமையான கூட்டணி அமைத்து பாஜ போட்டியிடும். அதைக் கட்சி மேலிடம் முடிவு செய்யும். பாஜ ஆட்சியைப் பார்த்து நிதிஷ் கூட்டணி ஆட்சி என்று காங்கிரஸ் கூறுகிறது. 28 பிட்டுத் துணிகளை வைத்து தைத்த போர்வையை போர்த்திக் கொண்டு எங்களைப் பார்த்து காங்கிரசார் குறை கூறிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு தமிழிசை கூறினார்.

The post எதையும் எதிர்பார்த்து டெல்லி செல்லவில்லை: தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: