வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நெகிழி பொருட்கள் ஒழிப்பு உறுதியேற்பு

 

பட்டுக்கோட்டை, ஜூன் 8: வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நெகிழிப் பொருட்களுக்கு மாற்றை பயன்படுத்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நெகிழிப் பொருட்களுக்கு மாற்றை பயன்படுத்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் முனைவர் அருண்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது,

நெகிழிப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், நெகிழிப் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் பற்றியும், மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவற்றின் நன்மை, தீமைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. முனைவர்கள் முத்துக்குமரன், செந்தில்குமார், சுருளிராஜன், விஜயபிரியா மற்றும் 25க்கும் மேற்பட்ட பண்ணைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் நெகிழிப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஏற்பாடுகளை முனைவர் முத்துக்குமரன் செய்திருந்தார்.

 

The post வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நெகிழி பொருட்கள் ஒழிப்பு உறுதியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: